வீடு இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பலி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குருபிரசாத்,17; நெல்லிக்குப்பம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் வரக்கால்பட்டில் உள்ள தனது பெரியப்பா மகேஷ் வீட்டில் இரவு துாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குருபிரசாத், மகேஷின் தாய் சரஸ்வதி,62; அவரது மகன் காமேஷ்,19; ஆகியோர் தூங்கியுள்ளனர்.
நள்ளிரவு வீட்டின் மண் சுவர் இடிந்து மூவர் மீதும் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குருபிரசாத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயமடைந்த மற்ற இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement