ஆஷாட நவராத்திரி விழா
பரமக்குடி: பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 15ல் துவங்கி நடக்கிறது. கோயிலில் தனி சன்னதியில் உள்ள சொர்ண வராகி அம்மனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு வராகி வனதேவதை அம்மனாக அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement