புகார் பெட்டி
நிழற்குடை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் ஆக்கிரமிப்பில் உள்ள பயணியர் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ஏழுமலை, நெய்வாசல்.
பொதுமக்கள் பாதிப்பு விருத்தாசலம், தென்கோட்டைவீதியில் தள்ளுவண்டிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
– வேல்முருகன், விருத்தாசலம்.
நிழற்குடை தேவை
பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ரமேஷ், துறையூர்.
சோலார் விளக்குகள் அமைக்கப்படுமா? பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் – கோட்டைக்காடு மேம்பாலத்தில் சோலார் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– கருணாநிதி, புக்குழி.
பயணிகள் அவதி
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– தனசேகரன், பெ.பொன்னேரி.
விபத்து அபாயம் விருத்தாசலம் – கடலுார் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முகப்பில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– மோகன், விருத்தாசலம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
திட்டக்குடி பஸ் நிலைய நிழற்குடையில், பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ரவி, குடிக்காடு.