மணமான பெண்ணிற்கு ‘டார்ச்சர்’ தே.மு.தி.க., நிர்வாகி மீது வழக்கு
ராமாபுரம்: திருமணமான பெண்ணிற்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த, தே.மு.தி.க., நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமாபுரம், ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்; பழைய குற்றவாளி. தற்போது, சிறையில் உள்ளார். இவரது மனைவி நித்யா, 40. இவர்களது மகன் பாரத், 18.
இந்நிலையில், 155வது வார்டு தே.மு.தி.க., வட்டச் செயலராக உள்ள ராமாபுரம், செந்தில் நகரைச் சேர்ந்த கார்த்திக், 34 என்பவர், நித்யாவை அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சுரேஷ் சிறையில் இருப்பதால் தன்னுடன் வந்து வாழுமாறு தொந்தரவு செய்துள்ளார்.
இதை, நித்யாவின் மகனான பாரத், 18, என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், பாரத்தை ‘வாட்ஸாப்’ தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.
இது குறித்து விசாரித்த ராமாபுரம் போலீசார், கார்த்திக் மீது பாரதிய நியாயச் சட்டத்தின் கீழ் ஆபாசமாக பேசுதல், பெண்ணை அவமதித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளிலும், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது
-
ரோட்டை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
‘இளைஞர்கள் காந்திய சிந்தனையை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்’
-
38 ஊராட்சிகளை பசுமையாக்க 25,000 மரக்கன்றுகள் வளர்ப்பு