ஜி.ஹெச்.,ல் டாக்டர் போல் கோட் அணிந்து பெண்களிடம் ரகளை செய்த இருவர் கைது

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்த, 20ல், காது, மூக்கு, தொண்டை பிரிவில், இரவு, 8:00 மணிய-ளவில் இரு வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர், டாக்டர் போல் வெள்ளை நிற கோட் அணிந்து, அங்கிருந்த பெண் நோயா-ளி களிடம், தான் ஒரு டாக்டர், சிகிச்சை அளிக்கிறேன் எனக்கூறி, அவர்களது கைகளையும் பிடித்து இழுத்துள்ளார். அப்போது, நோயாளிகள், 'ஏன் இப்படி செய்கிறீர்கள்' என கேட்டபோது, அவர்களை, ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.



இது குறித்து, நோயாளிகள் கூறிய தகவலின்படி, அங்கு வந்த செவிலியர் சுபாஷினி, வெள்ளை கோட்டுடன் டாக்டர் போல் ஒருவரும், அவரின் உதவியாளர் என மற்றொருவர் நின்றிருந்த-தையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். 'யார் நீங்கள், உங்களை யார் உள்ளே விட்டது' எனக்கூறி, திட்டியுள்ளார். மேலும் இது குறித்து உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன் புகார் படி, தர்ம-புரி டவுன் போலீசார் வந்துள்ளனர்.விசாரணையில், அவர்கள் தர்மபுரி அடுத்த கொல்லஹள்ளி பஞ்., மொடக்கேரியை சேர்ந்த தனபால், 21, அரூர் அடுத்த ஒடசல்பட்-டியை சேர்ந்த மோகன்விஜய், 21, என்பதும், இதில், தனபால் கடந்த, 2023ல், மருத்துவமனை ஆய்வகத்தில் தற்காலிகமாக, 6 மாதம் பணிபுரிந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement