தனியார் துறை வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத சரிவு

பெங்களூரு: இந்திய தனியார் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளின் வளர்ச்சி, ஜூலை மாதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் காணாத சரிவை சந்தித்துள்ளதாக, ஹெச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள, 'பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ.,' குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் விபரம்:

தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் ஆர்டர் நிலவரங்களை குறிக்கும் பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 54.30 புள்ளிகளாக குறைந்துள்ளது.

இது, கடந்த ஜூன் மாதம், 57.10 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும் என்பதால், இத்துறையில் வளர்ச்சி சாதகமாக நீடிக்கிறது.

சேவை துறை நிறுவனங்களின் மந்தமான செயல்பாடுகளே சரிவுக்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement