மதுரையில் வர்த்தக மையம்; ரூ.20 கோடி ஒதுக்க வேண்டும்: அரசுக்கு தொழில்முனைவோர் கோரிக்கை
சென்னை: மதுரை கப்பலுார் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள வர்த்தக மற்றும் மாநாட்டு மையத்துக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாகன உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஜவுளி உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. சென்னை மற்றும் கோவையில் வர்த்தக மையங்கள் உள்ளன. அங்கு, பல துறைகளின் சர்வதேச, தேசிய தொழில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், நிறுவனங்கள் பங்கேற்று உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துகின்றன.
இதனால், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களின், 'ஆர்டர்'கள் கிடைக்கின்றன. இந்த கண்காட்சிகளில் பங்கேற்க, தென் மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோர் அதிக செலவு செய்கின்றனர்.
எனவே, மதுரையை உள்ளடக்கிய தென் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்பெற, மதுரை கப்பலுார், 'சிட்கோ' தொழிற்பேட்டை வளாகத்தில், தமிழக அரசும், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமும் இணைந்து, வர்த்தக மற்றும் மாநாட்டு மையம் அமைக்க உள்ளன.
இத்திட்டம், 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருந்தது. அதில் தமிழக அரசின் பங்கு, 5 கோடி ரூபாய். இதற்கு, 2016ல் அனுமதி அளிக்கப்பட்டது. நிலம் அடையாளம் காணுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, வர்த்தக மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. திட்ட செலவு அதிகரித்து உள்ளதால், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு, சிறு, குறுந்தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 சென்னை, கோவை வர்த்தக மையங்களில் தொழில் கண்காட்சிகள் நடக்கின்றன 2 மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் வர்த்தக மையம் அமைத்தால் வளர்ச்சிக்கு உதவும்.
@block_B@
மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் வர்த்தக மற்றும் மாநாட்டு மைய தலைவர் செல்வராஜ் கூறுகையில், “அறிவிக்கப்பட்டதை விட, தற்போது, திட்டத்தின் செலவு அதிகரித்துள்ளது. இதனால், கண்காட்சி அரங்கு, மாநாட்டு அரங்கம், திறன் மேம்பாட்டு மையம் போன்றவற்றுடன் வர்த்தக மற்றும் மாநாட்டு மையம் அமைக்க, 40 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில், 20 கோடி ரூபாயை அரசு வழங்க வேண்டும். மீதி, 50 சதவீத நிதியை தொழில் நிறுவனங்கள் ஏற்கும்” என்றார்.block_B
மேலும்
-
கோவில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவு
-
சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; தொழிலாளர்கள் 2 பேர் பலி
-
துணிச்சலை வெளிப்படுத்திய வீரர்கள்; கார்கில் வெற்றி தினத்தில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
-
அக்டோபரில் இந்தியா வரும் பிரேசில் அணி; வரவேற்க தயாராக இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள்!
-
வறுமை 'விளையாடிய' போதும் விளையாட்டில் சாதித்த முரளி கிருஷ்ணன்: ஒரு ஹாக்கி வீரர் வென்ற கதை