இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரி
புதுடில்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 சதவீத 'கட்டாயப் படுத்தப்பட்ட தொழிலாளர்' வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் வாயிலாக, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் புதிய சவால் உருவாகியுள்ளது.
உலகளாவிய வினியோக தொடரில் கட்டாய தொழிலாளர் முறையை ஒழிக்க தவறியதாக கூறி, 60 நாடுகளுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக சட்டத்தின் பிரிவு 301ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைந்த தற்காலிக இறக்குமதி வரிக்கு பதிலாக, காலவரையற்ற இந்த புதிய வரி அமலுக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் இந்தியாவுக்கு 12.50 சதவீத வரி விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் திருத்தம் செய்து, கட்டாய தொழிலாளர் உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்ததால், வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பின் விளைவாக, ஜவுளி, ஆயத்த ஆடைகள், ரத்தினம் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், காலணிகள், பொறியியல் உதிரி பாகங்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்ட தொழிலாளர் அதிகம் சார்ந்துள்ள ஏற்றுமதி துறைகள் பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரங்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது.
மேலும்
-
துணிச்சலை வெளிப்படுத்திய வீரர்கள்; கார்கில் வெற்றி தினத்தில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
-
அக்டோபரில் இந்தியா வரும் பிரேசில் அணி; வரவேற்க தயாராக இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள்!
-
வறுமை 'விளையாடிய' போதும் விளையாட்டில் சாதித்த முரளி கிருஷ்ணன்: ஒரு ஹாக்கி வீரர் வென்ற கதை
-
அவமானத்தை சாதனையாக மாற்றினேன் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.,
-
உண்டியலில் 'பூக்கிறது' எதிர்காலம்!