தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்காக சென்றவர் மர்ம மரணம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம். கடந்த 17ம் தேதி காலையில் சட்டவிரோ மது விற்பனை தொடர்பான விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அன்றைய தினம் மாலையே அவர் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில், அருணாச்சலம் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த சபரிவர்மன்,33, என்ற மாற்றுத்திறனாளி, குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார். அவரது உடலில் 19 காயங்களில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
போலீஸ் கஸ்டடியில் வாலிபர் திடீர் மரணம்; நடந்தது என்ன? என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரபபு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அரசு காவல்துறை கைது மற்றும் விசாரணை முறையில் உடனடி மாற்றம் தேவை .கைது செய்தவரை உடனடியாக நேராக அரசு மருத்துவர் சோதனைக்குட்படுத்தப்பட்டு மருத்துவரின் சான்றிதழுடன் மாஜிஸ்திரேட் முன் நிறுத்தி நேராக ஜெயிலில் அடைக்கவேண்டும் .விசாரணை அதிகாரி நேராக ஜெயிலுக்கு சென்று ஜெயிலில் தனியாக கட்டமைக்கப்பட்ட அறையில் வீடியோ மற்றும் விசாரணையின் பதிவு செய்யும் முறையுடன்
விசாரணை நடத்தவேண்டும் .விசாரணை செ ய்யும் விசாரணை அதிகாரிக்கும் கைதிக்கு தனித்தனியே அறையில் உட்காரும் வசதியுடன் மத்தியில் கண்ணாடி சுவருடன் மைக்கில் ஒலிபெருக்கி வைத்து உரையாடலை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் .ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை அடித்துதான் வாக்குமூலம் பெறவேண்டும் என்ற நிலையில் விசாரணை இருக்க கூடாது .சந்தேகத்தின் பேரில் கைது செய்து அடித்து துன்புறுத்தி வாக்குமூலம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்படவேண்டும் .100 குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் .ஆனால் ஒரு நிரபராதி தவறாக தண்டிக்கப்படக்கூடாது என்பது சட்டத்தின் நியதி . அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் .
lockup மரணத்திற்கு தீர்வே கிடையாதா?..
ஒருவேளை போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க மறுத்திருப்பார். ஆட்சிகள் மாறினாலும், இந்த போலீசார், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது மாறவேமாறாது. வெட்கம். வேதனை. தமிழகத்தின் அவலம்.