புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 25-

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் , இலங்கை ஐ.ஐ.டி. ஆர்.டி. நிறுவனம் இடையே சர்வதேச தகவல் தொடர்பு பரிமாற்ற திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி நடந்தது.

இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணை தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தனர். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் அரவிந்த் வரவேற்றார். டீன் பாண்டியராஜன் துவக்க உரையாற்றினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சசி ஆனந்த், இலங்கை ஐ.ஐ.டி. ஆர்.டி. இன்ஸ்டிட்யூட் சார்பில் இயக்குனர் குணவர்தன, ஒருங்கிணைப்பாளர் பெராரா, இயக்குனர் உப்புல்வீர்சிங்கே கையெழுத்திட்டனர். பேராசிரியர் சபரி சங்கர் நன்றி கூறினார்.

Advertisement