அறுந்து கிடந்த மின்கம்பி மிதித்து ஒருவர் பலி
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராமு, 41; டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி பச்சையம்மாள். ஒரு மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை ராமு கரும்பு வயலுக்கு சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மிதித்ததால் சம்பவ இடத்திலேயே ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த ராமுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
Advertisement
Advertisement