அக்டோபரில் இந்தியா வரும் பிரேசில் அணி; வரவேற்க தயாராக இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள்!

4



நமது நிருபர்




அக்டோபர் தொடக்கத்தில் கொல்கத்தாவில் நடைபெறும் நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி விளையாட வாய்ப்புள்ளது; இந்த ஆட்டத்திற்காக முதற்கட்ட பேச்சு தீவிரமாக நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 25, 29ஆம் தேதிகளில் நட்பு போட்டிகள் முடிந்ததும், மூன்றாவது போட்டியை கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடத்த பிரேசில் கூட்டமைப்பு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி விளையாட வாய்ப்புள்ளது.

தற்போது முதற்கட்ட பேச்சு தீவிரமாக நடந்து வருகிறது. நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரின்போது கொல்கத்தாவின் தெருக்கள் முழுவதும் கொண்டாட்ட களமாக மாறி இருந்தது. ஏராளமான இந்திய கால்பந்து ரசிகர்கள் கட்அவுட், சுவரில் படம் வரைந்து கொண்டாடி மகிழந்தனர்.

பிரேசில் அணியை அழைத்து போட்டி நடத்துவதில் வங்கதேசம், கத்தார் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் ஆர்வம் காட்டின, ஆனால் இதுவரை இந்தியாவுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் முன்னேறியுள்ளன. செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில் மற்றும் பிரிஸ்பேனில் 25ம் தேதி, 29ம் தேதி 2 நட்பு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இதன் பிறகு 3வது போட்டியை அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் பிரேசில் அணி நடந்த இருப்பதாக அறிந்த இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடனும், எதிர்ப்பார்ப்புடனும் வரவேற்க காத்திருக்கின்றனர்.

இந்த நட்புப் போட்டி இறுதி செய்யப்பட்டால், பிரேசில் அணி கொல்கட்டா நகரம் நேரில் கொண்டாடி மகிழும். அப்போது கொல்கட்டா முழுவதும் விழாக்கோலம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement