பெண்ணுக்கு கொலை மிரட்டல் :வாலிபருக்கு வலை  

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே பெண் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிழக்குதெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி வெண்ணிலா,42;அதே பகுதியை சேர்ந்தவர் விஜய்,27;இருவருக்குமிடையே  பிரச்னை ஏற்பட்டு,அது சம்மந்தமான வழக்கில் விஜய் சிறை சென்று திரும்பினார்.இதன் காரணமாக ஆத்திரமடைந்த விஜய்,வெண்ணிலா வீட்டில் தனியாக இருந்த போது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து வெண்ணிலா நடுவீரப்பட்டு போலீசில் விஜய் மீது கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement