ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேருக்கு 'காப்பு'
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் போலீசார், ஜவளகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த சரக்கு வாக-னத்தை நிறுத்திய போது, டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். அதனால் தங்களது வாகனத்தில் போலீசார் துரத்தி சென்று, வனத்துறை சோதனைச்சாவடி அருகே, மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த தேன்கனிக்-கோட்டை சாகர் லேஅவுட்டை சேர்ந்த ஷேக்கவுஸ், 26, வாஜித், 54, ஹர்பாஸ், 26, ஆகிய, 3 பேரை கைது செய்த போலீசார், 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
காங்., கட்சியினர் போராட்டம்
Advertisement
Advertisement