'ஆளே இல்லாத டீக்கடை!'
'தேர்தலுக்கு தேர்தல் குழப்பம் ஏற்படுத்துவதே இவருக்கு வேலையாகப் போய் விட்டது...' என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் குறித்து எரிச்சலுடன் பேசுகின்றனர், பா.ஜ.,வினர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் தான் சிராக். தந்தை மறைவுக்குப் பின், கட்சியை கைப்பற்ற முயற்சி செய்தார். ஆனால், அவரது சித்தப்பா பசுபதி குமார் பரஸ், கட்சியை கபளீகரம் செய்ததுடன், பா.ஜ.,வுடன் நட்புறவுடன் இருந்தார்.
இதனால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என முடிவெடுக்காமல் தவித்த சிராக்கிற்கு, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., கை கொடுத்தது. பசுபதியை கழற்றி விட்டு, சிராக்குடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., போட்டியிட்டது. இந்த தேர்தலில், ஐந்து தொகுதிகளில் சிராக் கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில், அடுத்தாண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும், அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக சிராக் அறிவித்துள்ளார்.
இவரது கட்சிக்கு, பீஹாரை தவிர வேறு எங்குமே செல்வாக்கு இல்லை. பீஹாரிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தான் செல்வாக்கு உள்ளது.
இது குறித்து பா.ஜ.,வினர் கூறுகையில், 'கூட்டணியில் இருந்து கொண்டே, தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கிறாரே; ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றப் போகிறார் சிராக் பாஸ்வான்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
ஆளே இல்லாத டீ கடைக்கு அண்ணாமலை போன்றோர் டீ ஆத்த போகும்போது இவர் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கயில் டீ ஆத்த செல்வதில் எந்த தவறும் இல்லைமேலும்
-
திமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கு; மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
-
சூடுபிடித்தது பழநி கோவில் நில மோசடி வழக்கு; சார்பதிவாளரிடம் தீவிர விசாரணை
-
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 27)
-
அப்துல்கலாமின் அசையாத அர்ப்பணிப்பு நாட்டுக்கு சேவை செய்ய ஊக்கமளிக்கிறது; ராஜ்நாத் சிங்
-
கூரியரில் நியூசிலாந்துக்கு ரூ.5 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னையில் ஒருவர் கைது
-
தூத்துக்குடியில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைகிறது கனிமம் பிரித்தெடுக்கும் ஆலை