'தினமலர்' பிரமாண்டமாக நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ புதுச்சேரியில் வரும் 7ம் தேதி துவங்கி 4 நாட்கள் நடக்கிறது

புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழ் நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, வரும் ஆக., 7ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை பிரமாண்டமாக நடக்க உள்ளது.

புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுதோறும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடத்துகிறது.

புதுச்சேரி உப்பளம், புதிய துறைமுகம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 வரை குளிரூட்டப்பட்ட அரங்குகளில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுமையின் சங்கமம் புதுமைக்கு பெயர் பெற்ற 'தினமலர்' கண் காட்சி, இந்த முறையும் பல புதிய அம்சங்களுடன் வருகிறது.

குறிப்பாக, குழந்தைகளைக் கவரும் வகையில் ஏராளமான விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லாம் ஓரிடத்தில் நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான எல்.இ.டி., எல்.சி.டி., ஸ்மார்ட் டிவிகள், டி.டி.ஹெச். சாதனங்கள், கம்ப் யூட்டர்கள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் மற்றும் கேமராக்கள் என அனைத்தும் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப குறைந்த விலையில் கிடைக்கின்றன.

அதுமட்டுமின்றி, உங்கள் பணத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பாக வைக்கத் தேவையான நவீன சேப்டி லாக்கர்கள் மற்றும் மின்னணு பாதுகாப்பு சாதனங்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

கனவு இல்லம் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த கண்காட்சி ஒரு வரப்பிரசாதம். உட்டன் புளோரிங், நவீன ரக சோபாக்கள் மற்றும் பலவிதமான பர்னிச்சர் வகைகள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளன.

மேலும், உங்கள் வீட்டை அழகாக மாற்ற வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விதவிதமான அலங்கார பொருட்கள் இங்கு அணி வகுக்க உள்ளன.

அத்துடன், உங்களுக்கு பிடித்தமான கார், பைக் மற்றும் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்யும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

விசாலமான 'பார்க்கிங்' பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி ஷாப்பிங் செய்வதற்காக, விசாலமான இலவச வாகன நிறுத்துமிடம் மற்றும் பசியாறுவதற்கு சுவையான உணவுகளுடன் கூடிய புட் கோர்ட் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடும்பத்துடன் நிம்மதியாக வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல இது சிறந்த வாய்ப்பாகும்.


@block_B@

ஸ்டால் முன்பதிவு



கண்காட்சிக்கான ஸ்டால் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலேயே ஸ்டால்கள் உள்ளதால், ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். கூடுதல் தகவல்களுக்கு ரவி (98940 09059), அப்போலர் (98430 48735), ரதீஷ் கண்ணா (98940 09058), மகாலிங்கம் (98430 48355) மற்றும் ஹரிதாஸ் (97872 52114) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.block_B

Advertisement