சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

இதேபோல், முதல்பாலமேடு ஏகாம்பரேஸ்வரர், சன்னதி தெரு சங்கர லிங்கேஸ்வரர், அ.பாண்டலம், மூக்கனுார், மஞ்சப்புத்துார் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் சாலை சங்கர லிங்க சித்தர் பீடத்தில் நடந்த ஆடி மாத பிரதோஷ வழிபாட்டில் நந்தியம்பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் அடிகளார் சீனிவாசன் செய்திருந்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Advertisement