மதுபாட்டில் விற்றவர் கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ஆலிச்சிக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியை சேர்ந்த ரெங்கநாதன், 42, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, ரெங்கநாதனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement