இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

செஞ்சி: செஞ்சியில், விழுப்புரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணைத் தலைவர் பிரித்விராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுரேஷ் துரைராஜ் விளக்கி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு சிறப்புரையாற்றினார்.

நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய பொதுச் செயலாளர் போகிராஜா, ஒன்றிய செயலாளர் நரேஷ், நகர செயலாளர் கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு நன்றி கூறினார்.

Advertisement