தூத்துக்குடியில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைகிறது கனிமம் பிரித்தெடுக்கும் ஆலை

10


தூத்துக்குடி: தமிழகத்தில் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கனிம ஆலை அமைய உள்ளது; இதனால் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் என்பது இந்தியாவின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது அரிய மண் கனிமங்கள் மற்றும் கடற்கரை மணல் கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல் பணிகளில் ஈடுபடுகிறது.

தற்போது தமிழகத்தின் தூத்துக்குடியில் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கனிம ஆலை அமைய உள்ளது; இதனால் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.பி. மொகந்தி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''மின்சார வாகனங்கள், காற்றாலைகள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பிற முக்கியத் துறைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும். இங்கு தயாரிக்கப்படும் கனிம வளங்கள் வாயிலாக பொருளாதாரம் ரீதியாகவும் அரசு பயனடையும்'', என்றார்.

Advertisement