பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; மாற்று ஏற்பாடு செய்யாமல் வாரியம் அலட்சியம்
சென்னை: பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தமிழக குடிநீர் வாரியம் மெத்தனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14,141 பாசன ஏரிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டிலும் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள் வறண்டுள்ளன.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகளில், 59 அணைகள் வறண்டுள்ளன. மேலும், 16 அணைகளில் 25 முதல் 50 சதவீதம் மட்டுமே நீர் உள்ளது. பாசன ஏரிகளில் 3,489 வறண்டு கிடக்கிறது. மேலும், 6,158 ஏரிகள் வறண்டு விடும் நிலையை எட்டியுள்ளன. ஆறுகள், அணைகள், ஏரிகள் வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை, தமிழக குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது.
நீர்நிலைகள் வறண்டுள்ளதுடன், நிலத்தடி நீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வரவில்லை. பல மணி நேரம் மோட்டாரை இயக்குவதால், மின்சார செலவும் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில், குடிநீர் பற்றாக்குறை தலை துாக்கியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
விருதுநகர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, துாத்துக்குடி, தஞ்சாவூர், நாமக்கல், பெரம்பலுார், மதுரை, சிவகங்கை, தர்மபுரி, கடலுார், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், குடிநீர் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், நிலத்தடி நீர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நீராதாரங்களின் நிலை விபரம், நீர்வளத்துறை வாயிலாக, தமிழக குடிநீர் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் ஆதாரத்திற்கான மாற்று திட்டத்தை மேற்கொள்ளாமல், தமிழக குடிநீர் வாரியம் மவுனம் காத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
@block_B@
தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு, கோடைக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நிதியை வைத்து, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய ஆழ்துளை குழாய்கள் அமைப்பது, கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும். நடப்பாண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், குடிநீர் பிரச்னையை சமாளிக்க, சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
முதல்வரின் நேரடி கட்டுப் பாட்டில் துறை உள்ளதால், அவரிடம் நிலைமையை எடுத்துக்கூறி பணம் கேட்பதற்கு, உயர் அதிகாரிகள் தயங்குகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து, மக்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.block_B
திரைப்படம் நடிப்பதை நிறுத்திவிட்டதால் விஜய் இரசிகர்களின் கண்ணீர்தான் ஆறாக ஓடுகிறதாமே. அதை ஒருங்கிணைத்து ஆற்றில் விட்டாலே தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும்.
அதிகாரிகள் ரொம்ப பிஸி. அப்படி என்ன பிஸி? மொதல்ல அவர்கள் டாஸ்மாக் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகுதான் மக்களின் குடி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய அந்த கருப்பு பிராணிதான். வெட்கம் வேதனை
ஜனநாயகன் பட வசூல் பற்றி கவலைப் படவே நேரம் இல்லை. இதில் குடிநீர் பற்றி ஏன் யோசிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் குடிநீர் பிரச்சினை ...
தமிழ்நாட்டின் அணைகளை படிந்துள்ள வண்டல்களை சங்கதிகளை என்று சுத்தப்படுத்தி இருக்கிறோம் ??
பாண்டிய சோழ சேர மன்னர்கள் உருவாக்கிய கண்மாய்க்கலை என்று சுத்தம் சேய்துள்ளோம்
இவைகள் ஆழமாக இருந்தால்தான் மழை களங்களில் வரும் தண்ணீரை சேமிக்க முடியும் .
மேலும் ஆழ்துளை கிணறு ஒரு மோசமான வழிகாட்டுதல். இதனால் பூமி அதிர்ச்சி நிலநடுக்கம் உருவாகிறது
மக்களுக்கு முதலில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.
குடிப்பதற்கு வெர்ஜின் நீரை பயன்செய்யுங்கள்.
குளிக்க துணி துவைக்க வீடு கழுவ செடிகளுக்கு நீர் பாய்ச்ச மீண்டும் சுத்திகரிக்கப்பட்டதண்ணீரை பயன்படுத்தவேண்டும் என மக்களுக்கு சொல்லுங்கள்.
வரும் களங்களில் மழை சில நாட்கள் மட்டும் சபரி மிதமான நிலையில் பெய்யலாம் அப்படியாயின் அதை சேமிக்க தகுந்த வல்லுநர்களைக்கொண்டு சிறப்பு திட்டம் உருவாக்குங்கள்
First connect all the rivers flowing in TN.Save the rain water that goes into sea.In chennai alone millions of gallons of rain water goes into sea.This is more than chennai's annual demand.Prevent the enormous amount of kaveri water that goes to sea by building more check dams.This will recharge ground water to a great extent.
நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சினிமா பாணியில் செயல்படும் நடிகர் கும்பலின் கையில் ஆட்சி . முதல்வர் நடித்த ஜனநாயகம் படம் போலவே இந்த அரசுக்கு எதிராக மக்களே துப்பாக்கி ஏந்தி போராடும் காலம் வந்துவிட்டது. ஜனநாயகம் படம் தியேட்டரை விட்டு போகும் முன் இந்த ஆட்சி போய்விடும்.
தமிழன் உங்களுடைய இந்த ஒரு கருத்துக்காக உங்களுடன் நான் உடன் படுகிறேன்
எவன்னாலும் ஸநேரில் சந்திக்க முடியாத ஒரு முதலமைச்சர் ..
ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஆறடி ஆழத்தில் மெட்ரோ குழாய்கள் வீட்டில் தொட்டிகளில் நிரப்புகின்றன ..திறந்து மூட வாய்ப்பில்லை ..கழிவுநீர் இந்த பைப்பக்கத்திலிருந்து கசிந்து குடிநீருடன் கலப்பது அன்றாட நிகழ்வு. இந்த பைப்களில் மீட்டர் பொருத்த வாய்ப்பில்லை ..
நாக்பூர் போன்ற நகரங்களின் குடிநீர் கட்டமைப்பை பார்த்து இந்த அரசு கற்றுக்கொள்ளுமா ?மேலும்
-
தங்கம் வென்றார் ஈஷா * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்
-
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம்: எஸ்ஐடியில் பட்டய கணக்காளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
சென்னை சென்ட்ரல் அருகே ‘போதை’ மாணவர்கள் வெறியாட்டம் இருவருக்கு வெட்டு; மக்கள் அலறியடித்து ஓட்டம்
-
பட்டா இடத்தை அளவீடு செய்ய வேண்டும்: மா.கம்யூ. போராட்டத்தில் 'தள்ளுமுள்ளு'
-
ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 15 நாளில் முழு அனுமதி தர அரசு முடிவு
-
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்