தங்கம் வென்றார் ஈஷா * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்
ஹாங்சு: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்திய வீராங்கனை ஈஷா சிங், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சீனாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்'/'பிஸ்டல்'/'ஷாட் கன்') போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் மனு பாகர் (586 புள்ளி, 6வது இடம்), ஈஷா சிங் (585, 8) என இரண்டு வீராங்கனைகள் தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட, பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் ராஹி சர்னோபத் (582), சிம்ரன்பிரீத் கவுர் (576), 12, 30வது இடம் பிடித்து வெளியேறினர்.
அடுத்து நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட ஈஷா சிங், மொத்தம் 40 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மனு பாகருக்கு (28) வெண்கலம் கிடைத்தது. சீனாவின் ஜங் யுயே (37) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா, தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் வென்று, பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை