காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்

1


கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வதாக வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் பிரிவு பளு தூக்குதலில் பிந்தியாரணி வெண்கலம் வென்றுள்ளார்.


ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கம் வென்றது.


இந்நிலையில், மகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.


இந்தியாவின் பிந்தியாராணி தேவி, 58 கிலோ பிரிவில் 199 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 6வது பதக்கம் ஆகும்.

ஞானேஸ்வரி யாதவ்



முன்னதாக, 53 கிலோ பிரிவு பளுதூக்குதலில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஞானேஸ்வரி யாதவ்(23) 199 கிலோ தூக்கி வெள்ளி வென்றார். ஸ்னாட்ச் முறையில் 88 கிலோவையும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவையும் தூக்கினார்.

Advertisement