கோவில் சொத்தை மீட்க கோரி மனு
கடலுார்: ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடத்தை மீட்க வேண்டுமென, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரன் ஆலய சேவா மற்றும் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் அளித்த மனு: தொரப்பாடி பேரூராட்சியில் பழமைவாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் கட்டுப்பாட்டின் கீழ் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை சிலர் போலி ஆவணங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கோவில் சொத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென, ஆக்கிரமிப்பாளர்களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த இடத்தை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை