வாசற்படிக்கு வந்த கரடி; அருவங்காடு மக்கள் அச்சம்
அருவங்காடு: குன்னுார் அருவங்காடு அருகே உள்ள 'குட்நியூஸ்' சென்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் நுழைவாயில் படிக்கட்டில் நேற்று காலை, 8:45 மணிக்கு கரடி அமைதியாக அமர்ந்திருந்தது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் குடியிருப்புவாசிகளும் இதனை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. சமீப காலமாக குன்னூர், அருவங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் குடியிருப்பு பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில், இரவில் உலா வரும் கரடிகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வர துவங்கியுள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர், கூண்டு வைத்து கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்கள் வலியெல்லாம் இனி மற்றவர்களுக்கு மருந்தாகும்; 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி
-
காமன்வெல்த் விளையாட்டு போட்டி; இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை
-
கருவின் பாலினத்தை வெளியிட்ட 'யூ டியூபர்' இர்பானுக்கு சிக்கல்
-
போரில் ஈரானுக்கு ரஷ்யா ஆதரவு அளித்ததா? புடினிடம் கேட்பேன் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
போலீசார் இல்லாத வாகன தணிக்கை சாவடி; தடையின்றி செல்லும் கனிமவள கடத்தல் வாகனங்கள்
-
உத்திரமேரூரில் பதிவான ஓட்டுகளை சரி பார்க்கும் பணி நாளை தொடக்கம் 10 இயந்திரங்களை சரி பார்க்க கேட்டுள்ளது தி.மு.க.,
Advertisement
Advertisement