உளுந்துார்பேட்டை கமிட்டியில் ரூ.50.56 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் 50.56 லட்சம் ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
உளுந்துார்பேட்டை கமிட்டியில் நெல் 2,900 மூட்டை, மக்காச்சோளம் 80, தேங்காய் பருப்பு, உளுந்து தலா 5, எள் 2 மூட்டை என மொத்தம் 2,992 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக நெல் 2,328 ரூபாய், மக்காச்சோளம் 2,686 , தேங்காய் பருப்பு 11,619, உளுந்து 9,509, எள் 9,809 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 50 லட்சத்து 56 ஆயிரத்து 677 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 150 மூட்டை, வேர்க்கடலை 30, எள் 15, கம்பு, ராகி தலா ஒரு மூட்டை என 197 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,570 ரூபாய், வேர்க்கடலை 8,940, எள் 9,650, கம்பு 4,489, ராகி 3,839 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் நேற்று மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 778 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று விளைபொருட்கள் வரத்து எதுவும் இல்லாததால், விற்பனை நடக்கவில்லை.
தியாகதுருகம் கமிட்டியில் நெல் 300 மூட்டை, மக்காச்சோளம் 14, உளுந்து ஒரு மூட்டை என மொத்தம் 315 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக நெல் 2,150, மக்காச்சோளம் 2,593, உளுந்து 5,589 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 891 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சங்கராபுரம் கமிட்டியில் மக்காச்சோளம் 168 மூட்டை, நெல் 82, எள் ஒரு மூட்டை என மொத்தம் 251 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக மக்காச்சோளம் 2,646 ரூபாய், நெல் 1,966, எள் 3,019 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 684 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.