அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி... 5 பேர் படுகாயம்
சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடந்த உணவுத்திருவிழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சியாட்டில் சென்டர் பகுதியில் 'பைட் ஆப் சியாட்டில்' என்ற உணவுத்திருவிழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,50,000 மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று மாலை 6 மணியளவில் உணவுத்திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது சில மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், சியாட்டில் சென்டர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
இவர்கள் எல்லாருமே அதே மர்ம கும்பல் தான்.
அதிபர் ஈரானில் துப்பாக்கி சூடு நடத்துகிறார் மக்களோ தங்கள் சொந்த நாட்டில் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் அதிபரின் வழியே மக்களின் வழி
இந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்காரே உலகில் எங்கெல்லாமோ குண்டுபோட்டு அங்குள்ள சாமானியர்களை கொன்றுகுவிக்கிறார். ஆனால், அவர் ஊருக்குள்ளேயே அமெரிக்க மக்களை துப்பாக்கி சூடு நடத்தி கொள்பவர்களை அந்த டிரம்பால் பிடிக்கமுடியவில்லை. பிடிக்க முடியாது. Gun Lobbyists are so powerful.
இப்போதுதான் பெர்லினில் ஒரு மர்ம மனிதன் கரோட்டி ஒரு சாவு 29 பேர பனுகாயம் என்று படித்தேன் அது காய்வதற்கு முன பே மற்றொரு மரம மனிதன் அமெரிக்கவில் துப்பாக்கிசூடு நடத்தியதில் இருவர் சாவு பலர் படுகாயம் என்று படிக்கிறேன். இந்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்களுக்கு அளவே கிடையாதா. அவர்களை தண்டிக்க எந்த சட்டமும் உபயோகப்படாதா? அல்லது நாம் கற்காலத்தை நோக்கி பயணிக்கிறோமா? சுதந்திரம், ஜனநாயகம், பேச்சுரிமை என்பதெல்லாம் அர்த்தமில்லாத வார்த்தைகளா?மேலும்
-
தங்கம் வென்றார் ஈஷா * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்
-
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம்: எஸ்ஐடியில் பட்டய கணக்காளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
சென்னை சென்ட்ரல் அருகே ‘போதை’ மாணவர்கள் வெறியாட்டம் இருவருக்கு வெட்டு; மக்கள் அலறியடித்து ஓட்டம்
-
பட்டா இடத்தை அளவீடு செய்ய வேண்டும்: மா.கம்யூ. போராட்டத்தில் 'தள்ளுமுள்ளு'
-
ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 15 நாளில் முழு அனுமதி தர அரசு முடிவு
-
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்