உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கணும்; அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அண்ணாமலை உறுதி
நமது நிருபர்
அப்துல் கலாமின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாமின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கிடையே நிருபர்களிடம், ''கலாம் ஐயாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மாணவன் நான்.
இன்று கலாம் ஐயாவின் வழியில் செல்கிறேன். அறிவியலும், ஆன்மிகமும் கலந்திருக்க வேண்டும் என்று விரும்பியர் அப்துல் கலாம் ஐயா. ஒரு குட்டித்தீவில் பிறந்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அப்துல் கலாம் நினைவிடத்தில் அண்ணாமலை மரியாதை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நன்றாக கவனியுங்கள். அவர் ஆரம்பத்தில் தலையில் கர்சீஃப் கட்டவில்லை. அருகில் உள்ளவர் குல்லா போல் அணிய சொல்கிறார். அவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அதைச் செய்கிறார். இதில் என்ன தவறு? பிறர் மனம் நோகாமல் நடப்பதும் மனிதாபிமானம்தான். மேலும் அவர் வீ த லீடர்ஸ் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு வரும்போது மதத்தை பூட்டி வைத்து விட்டு வாருங்கள். இங்கே அனைவரும் ஒன்றே. ஜாதி, மத பேதமில்லை என்பதைதான் அப்படிச் சொன்னார்.
இங்கு பதிவிடும் அண்ணாமலை ஹேட்டர்ஸ்களுக்கு ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன்....மகான் திரு.அப்துல் கலாம் அய்யா அவர்கள் பொற்கோவிலுக்கு விஜயம் செய்த போது சீக்கியர்களின் மரபுப்படி தலைக்கு கைகுட்டை அணிந்து சென்றார்....அதேபோல் காஞ்சி காமகோடிகள் மற்றும் ஆதினங்களை சந்திக்கும் போது அவரின் மத அடையாளங்களை துறந்து இந்து சமய மரபுகள் படி தரையில் அமர்ந்து பிரசாதங்களை பெற்று கொண்டார்.....அப்படி வாழ்ந்த மகானின் சமாதியில் திரு அண்ணாமலை அவர்கள் தலைக்கு கைக்குட்டை அணிந்தது பெரிய விஷயமில்லை.....வேண்டுமென்றால் பாஜகவினருக்கு இது வயிற்றெரிச்சலை கொடுக்கும்.....அவர்களுக்கு உடனடி நிவாரணம் ஜெலூசில் மட்டுமே....!!!
அப்துல்கலாம் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார். இவரைப் போல நேரத்திற்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இதற்கு முன் எந்த இஸ்லாமியர் நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமியர் அடையாளங்களை அண்ணாமலை காட்டிக் கொண்டாரா? இப்போது மட்டும் திடீர் மாற்றம் ஏன்?
அண்ணாமலை அவர்களை தவிர அங்கே பல ஹிந்துக்கள் கூடி இருக்கிறார்கள். இவர் மட்டும் தலையில் குல்லா போடவேண்டிய அவசியம் என்ன? அதுமட்டும் இல்லாமல் அவர் பாஜகவில் இருக்கும்போது குல்லா அணிவதை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று கொஞ்சம் யூடியூபில் அந்த காணொளியை தேடி பார்த்து கருத்து தெரிவியுங்கள். அண்ணாமலை அவர்கள் பாஜகவிலிருந்து பிரிந்து தனி இயக்கம் ஆரம்பித்தவுடன் நானும் தமிழகத்திற்காக இனி பாஜகவிற்கு பதிலாக அண்ணாமலை அவர்களுக்கு ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் கடைசியில் இவரும் மற்ற அரசியல்வாதிகளைப்போலவே செய்துள்ளார்.
என்ன கன்ராவி புடிச்ச வியாபாரம் இது? நல்ல வேளை! நாமெல்லாம் ஏமாறாம தப்பிச்சிட்டோம்.
சிங்கம் ஒவ்வொரு நாளும் தானும் அசிங்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் தன்னை பின் தொடர்ந்து கொண்டிருப்பவர்களையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது நீ நீயாகவே இரு நான் நானாகவே இருக்கிறேன் இருவருக்கும் அந்த உரிமை உண்டு என்று வாழ்வது தானே உண்மையான சமூக நீதி இதற்காக ஏன் வேஷம் போட்டு கொண்டு அலைய வேண்டும் மதத்தை வீட்டில் வைத்து பூட்ட வேண்டும் என்று கூறியதெல்லாம் அந்தந்த இடத்திற்கு தகுந்தார் போல வேடத்தை மாற்றிக் கொண்டு அலைய ஏதுவாக இருக்கும் என்பதால் தானா
மதத்தை வீட்டில் பூட்டி வைத்தவர் இப்போது குல்லா வேசம் எதுக்கு போடுகிறார்... யாரை ஏமாற்ற?
மீண்டும் முதலில் இருந்து திராவிட மாடல். WTL இருந்து வெளியே வந்த போது மனதில் ஒரு வருத்தம் இருந்தது. இப்போது குல்லாவை பார்த்து இவரும் முல்லா தான் என வருத்தம் போய் விட்டது
அப்துல் கலாம் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு அஞ்சலி செலுத்த குல்லா போட்டுக்கொண்டு சென்று திராவிட நாடார்களை போல் கேவலமான அரசியல் செய்கிறார் அண்ணாமலை. கண்டிக்கிறேன்
நல்லாத்தானய்யா இருந்தாரு? தலையில எதற்கு திடீர் கர்சீப் குல்லா? மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் கலாம் சார். நீங்க தலையில கர்சீப் கட்டி போலி இஸ்லாமியர் வேடம் போடாமல் இருந்தாலும் கூட தகுதியுள்ளவர்கள் மரியாதையை அவர் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்.
அடுத்து நோம்பு தொறக்க வேண்டியதுதான்.
அடுத்த திராவிட மாடல் சிங்கமே