காவல் துறை சேவையை பாராட்டி விருது வழங்கும் விழா

: புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டி, புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் - 167, சார்பில் விருது வழங்கும் விழா, (28ம் தேதி) நடக்கிறது.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை ஏற்படுத்தி வரும் காவல் துறையினரை கவுரவித்து, பாராட்டி, புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் 167, சார்பில் நைட்ஸ் இன் காக்கி 2026, விருது வழங்கும் விழா, புதுச்சேரி நுாறடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று (28ம் தேதி) மதியம் 2:30 மணியளவில் நடக்கிறது.

இதில், காவல் துறையை சேர்ந்த அதிகாரிகாரிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், ஜான்குமார் எம்.எல்.ஏ., டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஜ.ஜி, சத்தியசுந்தரம், அகில இந்திய ரவுண்ட் டேபிள் தலைவர் சஞ்சீவி, புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் - 167 தலைவர் ராமராஜன், செண்பகா கார்ஸ் நிர்வாக இயக்குநர் அசோகன், போலீஸ் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement