விழுப்புரம் மாவட்ட தேர்தலில் அ.த.மு.க.,தான் அதிக ஓட்டு
விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு நேற்று தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது உடனிருந்த விழுப்புரம் தொகுதி வழக்கறிஞர் அணி செயலாளர் கவுன்சிலர் ராதிகா கூறுகையில், ‘விழுப்புரம் மாவட்டத்தில், 2026ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. மாவட்டத்தில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில், 4 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 33.65 சதவீதம் ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., கூட்டணி, 4 தொகுதிகளிலும், 30.62 சதவீதம் ஓட்டுகள் பெற்ற தி.மு.க., கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் 31.07 சதவீதம் ஓட்டுகள் பெற்ற த.வெ.க., ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியைவிட, 85,601 ஓட்டுகள் அ.தி.மு.க., குறைவாக பெற்றது. தற்போதைய 2026 ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க., கூட்டணியைவிட, அ.தி.மு.க., கூட்டணி கூடுதலாக 43,520 ஓட்டுகள் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலை விட, அதிக. ஓட்டுகளை கூடுதலாக அ.தி.மு.க., பெற்றதைப் பற்றி பாராட்ட மனமில்லாத சிலர், முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது உண்மைக்கு மாறாக குறை சொல்லி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும்
-
கருங்கடல் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு; உக்ரைன் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் மேல்முறையீடு; ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
வெளிநாட்டு கைதிகளுக்கான சிறையில் வசதிகள் உள்ளதா? அறிக்கை கோரும் ஐகோர்ட் கிளை
-
போஸ்டர் புதுச்சேரி
-
தீமிதி திருவிழாவில் அன்னதானம்
-
கிரீன்டெக் மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்