வரும் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்துவதாக தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கறிக்கோழிகளை விற்பனை செய்வதற்கு 12 மணிநேரத்திற்கு முன்பாக, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் தீவனக் கட்டுப்பாடு முறையைக் கடைபிடிப்பதால், பொருளாதார இழப்பு ஏற்படுவதாக கறிக்கோழி விற்பனையாளர்கள் புகார் அளித்தனர். இந்த கோழி எடை மோசடியை தடுக்கக்கோரி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் எப்போதும் போல் தீவனக்கட்டுப்பாடு நடைமுறையை உடனே செயல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் தமிழ்நாடு கறிக்கோழி விற்பனையாளர்களுடன் சேர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படுவதாக விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அன்றைய தினம் முதல் கோழி வணிகர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
தாரா ள மாநிறுத்தலாம்