டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
புதுடில்லி: டில்லியில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக, புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியினர் முதல் முறையாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமையாக தொடர்கிறது என்று மீண்டும் வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்த போது விவசாயிகளின் நலனில் அரசு கவனம் செலுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
இந்த கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி தலைவனே ஒருகால் அமெரிக்க அதிபர் டிரம்பால் அனுப்பப்பட்ட
தூதுவனோ என்ற சந்தேகம் எழுகிறது ஏனென்றால் அவன் இங்கு வந்த உடனே இந்த நீட் தேர்வு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நமது பிரதமரின் செல்வாக்கை புகழை கெடுக்க வந்தவனோ அனுப்பப்பட்டவனோ என்று சந்தேகமாகவே இருக்கிறது நமது உள்துறை அமைச்சகம் உளவுத்துறை இதை சற்றே தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும்
முக்கிய ஆலோசனை நடத்தி பார்லிமென்ட் நேரத்தை வீணடிக்காமல் மசோதா நிறைவேற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதலில் போராட்ட தலைவனை சிஜேபி பிடியுங்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன் அங்கிருந்து வந்து இங்கே அதை ஒழிப்பேன் இதை ஒழிப்பேன் என்று கோஷம் இடும் கயவனை முதலில் தூக்குங்கள் .