குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவரம் மையத்துக்கு உட்பட்ட கோழிக்கோடு சாலை, குடோன் பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களை, சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவரம் மையத்துக்கு உட்பட்ட கோழிக்கோடு சாலை, குடோன் பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களை, சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் வன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement