கிரீன்டெக் மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம் 

கடலுார்: கடலுார் கஸ்டம்ஸ் சாலை கிரீன்டெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலுார் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்த ஜோதி, சுரோந்திரா பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி,கணித போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ஆசைத்தம்பி, தாயுமானவன், பார்த்திபன், வடிவேல், பள்ளி  தாளாளர் அய்யப்பன், செயலாளர் நஜ்முதீன், இயக்குநர்கள் உபைதுார் ரஹ்மான் அரவிந்த், செந்தில் குமார், கார்மேல் வின்சன்ட், முதல்வர் சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement