தீமிதி திருவிழாவில் அன்னதானம் 

சிதம்பரம்:   சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி த.வெ.க., தொண்டர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

   சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, த.வெ.க., கடலுார் தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. தெற்கு மாவட்ட பொருளாளர் அருண்ராஜ், மாவட்ட துணை செயலாளர் ராசம்மாள், சிதம்பரம் நகர செயலாளர் (மேற்கு) கென்னடி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சசிகலா, கடலுார் தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் குருமூர்த்தி மற்றும் இணை அமைப்பாளர்கள் ரஹமத்துல்லா சீனுவாசன், ரமேஷ், மணி, கார்த்தி, கவிபிரியன், நிர்வாகிகள் அலிபாஷா, சவுகத் அலி மற்றும் பலர் பங்கேற்றனர். 

Advertisement