வெளிநாட்டு கைதிகளுக்கான சிறையில் வசதிகள் உள்ளதா? அறிக்கை கோரும் ஐகோர்ட் கிளை
மதுரை: வெளிநாட்டு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் உள்ளதா, இல்லையெனில் மேம்படுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த கைதிகளை தடுத்து வைக்கும் சிறப்பு முகாம் உள்ளது. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, உகாண்டா, கென்யா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கைதிகள் 125 பேர் உள்ளனர். இவர்கள் கடும் குற்றங்களுக்காக அல்லாமல் விசா, பயண ஆவணங்கள் காலாவதியால் இந்தியாவில் தங்கியிருத்தல் அல்லது சிறு விதிமீறல்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு புதர் மண்டிய தாவரங்களை அகற்ற வேண்டும். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் வசதி, சமையலறை அமைக்க வேண்டும். 24 மணி நேர அவசர மருத்துவ வசதி செய்து டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். சட்ட உதவி மையம் அமைக்க வேண்டும். தண்டனை காலம் முடிவடைந்த அல்லது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வெளிநாட்டினரை தொடர்ந்து முகாம்களில் காவலில் தடுத்து வைப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மணிபாரதி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிறப்பு முகாம்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா, இல்லையெனில் மேம்படுத்த நடவடிக்கை என்ன, அதற்குரிய பட்ஜெட் தொகை விபரங்களை மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை இணை செயலர்கள், தமிழக டி.ஜி.பி., திருச்சி கலெக்டர் ஆக., 19ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
பணவீக்க விகிதத்தை விஞ்சி வருவாய் வழங்கும் 4 முதலீடுகள்: உங்கள் போர்ட்போலியோவுக்கு எது பெஸ்ட்?
-
'மணிபால்' மீது புகார் ஐ.பி.ஓ.,வை பாதிக்குமா?
-
ஐ.பி.ஓ., அலசல்: மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் லிமிடெட்
-
முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணிகள் ரத்து!
-
நாளைய மின்தடை 29 ம் தேதி
-
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா