ஐ.பி.ஓ., அலசல்: மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் லிமிடெட்
மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் லிமிடெட்
கடந்த 1991ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்ட 'மணிபால் ஹாஸ்பிட்டல்ஸ்' இந்தியா முழுதும் முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் முன்னணி பல்துறை மருத்துவமனை நெட்வொர்க்காக வளர்ந்துள்ளது.
மார்ச் 31, 2026 நிலவரப்படி, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 மருத்துவமனைகள், 13,037 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.
படுக்கைகளின் எண்ணிக்கையில், இந்தியாவின் மிகப்பெரிய பான் - இந்தியா தனியார் மருத்துவமனை நெட்வொர்க்காகவும், மருத்துவமனைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய நெட்வொர்க்காகவும் உள்ளது.
சிறப்பம்சங்கள்
* இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பல்துறை மருத்துவமனை நெட்வொர்க்குகளில் ஒன்றாக இருப்பது
* படுக்கைகளின் எண்ணிக்கையில் முதலிடத்திலும், மருத்துவமனைகளின் எண்ணிக்கையில் 2வது இடத்திலும் உள்ளது
* நிறுவனத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் என்.ஏ.பி.ஹெச்., மற்றும் என்.ஏ.பி.எல்., தர அங்கீகாரங்களை பெற்றுள்ளன
* கையகப்படுத்துதல்கள் மற்றும் திட்டமிடல் விரிவாக்கத்தின் வாயிலாக, தனது மருத்துவமனை நெட்வொர்க்கை கடந்த காலத்தில் விரிவுபடுத்தியுள்ளது
* இதயவியல், புற்றுநோயியல், நரம்பியல் போன்ற உயர்நிலை சிறப்பு சிகிச்சைகளை மையப்படுத்தி செயல்படுவது
* பெரிய மருத்துவ பணியாளர் குழுவையும், டி.என்.பி., - டி.ஆர்.என்.பி., மற்றும் எப்.என்.பி., போன்ற மருத்துவ பயிற்சி திட்டங்களை நடத்தி வருவது.
இடர்கள்
* நிறுவனத்தின் வருவாயில் பெரும்பகுதி கர்நாடகா மருத்துவமனைகளிலிருந்து வருவதால், அங்குள்ள பொருளாதார நிறுவனத்தின் வணிகம் மற்றும் லாபத்தை பாதிக்கலாம்
* உள்நோயாளி சேர்க்கை மற்றும் படுக்கை பயன்பாட்டு விகிதம் குறைந்தால் வருவாய், லாபம் பாதிக்கப்படலாம்
* இதயம், புற்றுநோய், நரம்பியல் உள்ளிட்ட முக்கிய சிறப்பு சிகிச்சைகளின் தேவை குறைந்தால், நிதி செயல்திறன் பாதிக்க வாய்ப்பு
* தேவையான உரிமங்கள், அனுமதிகள் பெறுவதில் அல்லது புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால், செயல்பாடுகள் பாதிக்கக்கூடும்
* காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய தொகைகள் தாமதமானால், பணப்புழக்கம் பாதிக்கப்படலாம்
* இந்நிறுவனத்தின் நிலுவை சட்ட வழக்குகளில் பாதகமான தீர்ப்புகள் வந்தால், வணிகமும் நற்பெயரும் பாதிக்க வாய்ப்பு
* மருத்துவர்களுக்கான தொழில்முறை கட்டணம் மற்றும் பணியாளர் செலவுகள் அதிகரித்தால், லாபம் குறையலாம்.
மேலும்
-
அடிதடி வழக்கில் சிறுவன் உட்பட 3 பேருக்கு காப்பு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது
-
5.972 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது: 2 பேர் தலைமறைவு
-
தி.மு.க., 'ஆல்பா' கொரோனா த.வெ.க., 'பீட்டா' கொரோனா
-
டாஸ்மாக் பணியாளர் 3 பேர் சஸ்பெண்ட்
-
கிராமங்களில் தங்கி மக்கள் குறைகளை கேட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்