சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
சிதம்பரம், ஜூலை 28 –
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிதம்பரம் பஸ் நிலையம் எதிரே பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், தீமிதி திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்து வநதது. 21ம் தேதி இரவு தெருவடைச்சான் வீதியுலா, 26ம் தேதி தேரோட்டம் நடந்தது. முக்கிய விழாவான தீமிதி விழா நேற்று நடந்தது.
அதையொட்டி நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அங்க பிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை பிரார்த்தனை என, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
29ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு, இரவு ஊஞ்சல் உற்சவமும், காத்தவராய சுவாமி கதை பட்டாபிஷேகத்துடன் ஆடி மாத தீமிதி திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமா வீராசாமி, பரம்பரை அருங்காவலர் கலியமூர்த்தி, சண்முகம் செய்து வருகின்றனர். மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதாரம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிதம்பரம் டி,எஸ்.பி., பிரதீப் மேற்பார்வையில், நகர இன்ஸ்பெக்டர் சிவானந்தம் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும், தீக்குண்டம் அருகே பக்தர்களுக்கு பாதுகாப்பாக பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
5.972 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது: 2 பேர் தலைமறைவு
-
தி.மு.க., 'ஆல்பா' கொரோனா த.வெ.க., 'பீட்டா' கொரோனா
-
டாஸ்மாக் பணியாளர் 3 பேர் சஸ்பெண்ட்
-
கிராமங்களில் தங்கி மக்கள் குறைகளை கேட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்
-
பெயின்டர் மீது போக்சோ
-
மக்கள் குறைதீர் கூட்டத்தில் த.வெ.க., துண்டு விசிலுடன் நுழைந்த பாட்டியால் பரபரப்பு