பணவீக்க விகிதத்தை விஞ்சி வருவாய் வழங்கும் 4 முதலீடுகள்: உங்கள் போர்ட்போலியோவுக்கு எது பெஸ்ட்?

ஒவ்வொரு முதலீட்டாளரும் விரும்புவது ஒன்றைத்தான்; அது பணவீக்கத்தை விட வேகமாக வளரும் பாதுகாப்பான முதலீடு. சந்தையில் கிடைக்கும் மியூச்சுவல் பண்டு, பி.எம்.எஸ்., - எஸ்.ஐ.எப்., மற்றும் ஏ.ஐ.எப்., ஆகிய நான்கு முதலீட்டு திட்டங்களும் ஒரே இலக்கை நோக்கியே செயல்படுகின்றன.

எனினும், நிதி திரட்டும் முறை, சொத்து உரிமை, நெகிழ்வுத்தன்மை, பணப்புழக்கம், கட்டமைப்பு மற்றும் ஆபத்து ஆகியவற்றில், இவை ஒவ்வொன்றும் தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளன.

முதலீட்டுத் தொகை அதிகரிக்கும் போது லாப சாத்தியமும் சிக்கலும் கூடும், ஆனால் பணப்புழக்கம் குறையும். '12/3/3' தத்துவத்தின் படி, நீண்டகால செல்வ உருவாக்கத்திற்கு வலுவான மியூச்சுவல் பண்டு திட்டங்களை அஸ்திவாரமாக வைக்க வேண்டும்.

கூடுதல் லாபம் மற்றும் பிரத்யேக வாய்ப்புகள் தேவைப்படும் இடங்களில் மட்டுமே, தேவைக்கு ஏற்ப பி.எம்.எஸ்., அல்லது ஏ.ஐ.எப்., திட்டங்களை இணைத்துக்கொ ள்ள வேண்டும்.

Advertisement