ஆரோவில் – தாய்லாந்து கலாசார பரிமாற்ற விழா
வானுார்: ஆரோவில் மற்றும் தாய்லாந்து இடையேயான நட்புறவைக் கொண்டாடும் வகையில் கலாசார பரிமாற்ற விழா நடந்தது.
ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் ஜெயந்தி ரவி வழிகாட்டுதலின் படி நடந்த விழாவில் தாய்லாந்து ராயல் தாய் கவுன்சில் ஜெனரால் ராச்சாஅரிபார்க், துணை கவுன்சில் ஜெனரல் போர்ன்புன் புபியாஞ்சாய் உட்பட 10க்கும் மேற்பட்ட குழுவினர்கள், ஆரோவில் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள், ஆரோவில் வாசிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு நிகழ்ச்சியாக ஆரோவில் வளாகத்தில் உள்ள சினிமா பாரடைசில் தாய்லாந்தின் உணவு மற்றும் கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான திரைப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, தாய்லாந்து உணவு வகைகள் வழங்கப்பட்டது.
ஆரோவில்லின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஈடுபடவும், தொடர்ந்து கலாசார பரிமாற்ற நிகழ்வுகளை நடத்த ஆர்வம் உள்ளதாகவும் தாய்லாந்து குழுவினர் தெரிவித்தனர்.
ஆரோவில் சர்வதேச நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் பிரமாண்ட உணவுத் திருவிழாவில் புகழ்வாய்ந்த இந்திய மற்றும் ஆரோவில் சிறப்பு உணவுகளுடன் சேர்த்து, தாய்லாந்து உணவு வகைகளும் பரிமாறப்பட உள்ளது.
இந்த விழா உள்ளூர் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுக்கும், ஒரு சிறந்த கல்வி வாய்ப்பாகவும் அமையும் என ஆரோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பணவீக்க விகிதத்தை விஞ்சி வருவாய் வழங்கும் 4 முதலீடுகள்: உங்கள் போர்ட்போலியோவுக்கு எது பெஸ்ட்?
-
'மணிபால்' மீது புகார் ஐ.பி.ஓ.,வை பாதிக்குமா?
-
ஐ.பி.ஓ., அலசல்: மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் லிமிடெட்
-
முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணிகள் ரத்து!
-
நாளைய மின்தடை 29 ம் தேதி
-
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா