தருமபுரம் ஆதினத்தின் பாரம்பரிய சுகாதார பூங்கா அமைக்கும் பணி :கவர்னர் துவக்கிவைப்பு
காரைக்கால்: தருமபுரம் ஆதினம் சார்பில் தன்வந்தரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா அமைக்கும் பணியினை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
காரைக்கால், திருநள்ளாறு, தருமபுரம் ஆதின கட்டளை மடம் சார்பில் தன்வந்தரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா மற்றும் பல்நோக்கு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
தருமபுரம் ஆதின 27வது குருமகா சந்நிதான கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார். கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, வளர்ச்சி திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பால்கி ஜெயா லேப் இயக்குநர் ஈஸ்வர் ராஜலிங்கம் வரவேற்றார்.
உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில், சென்னையைச் சேர்ந்த அறம் ஐ.ஏ.எஸ். அகாடமியின் பங்களிப்புடன் ‘தருமை ஆதீனம் கேரியர் அகாடமி’ துவங்கப்பட்டது. மேலும், தன்வந்த்ரா ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மூலிகைப் பண்ணைத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய மருத்துவ முறைகள், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘பாரம்பரிய சுகாதார பூங்கா’ அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
இதில், அமைச்சர் ராஜசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் விக்னேஷ்வரன், மீனாட்சிசுந்தரம், பால்கி ஜெயா லேப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஞான சரவணன், கவர்னரின் செயலர் மணிகண்டன், கலெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், சமுதாய அறப்பணியை முன்னேடுத்த தருமபுர ஆதீனத்தை அரசு மற்றும் காரைக்கால் மக்கள் சார்பாக பாராட்டுகிறேன். ஆதினத்தின் மூலம் மலிவு விலை உணவகம் துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தால் கோவிலை சுற்றி சிறு வியாபாரிகளின் உணவகங்கள் பாதிக்காமல் இருக்க மலிவு விலை உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட மட்டும் இடம் அளித்து, பார்சல் தருவதை தவிர்க்க வேண்டும்.
முன்னோர்கள் விட்டு சென்ற சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா, மூலிகை மருத்துவம் போன்ற மருத்துவத்தை மறந்து விடக்கூடாது என்பதற்காக தான் ஆயுஷ் மருத்துவத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆன்மீகத்தையும், பாரம்பரிய மருத்துவத்தையும் ஒன்றாக இணைக்கும் தருமபுரம் ஆதீனம் எடுத்திருக்கும் முயற்சி காரைக்கால் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றார்.
மேலும்
-
பணவீக்க விகிதத்தை விஞ்சி வருவாய் வழங்கும் 4 முதலீடுகள்: உங்கள் போர்ட்போலியோவுக்கு எது பெஸ்ட்?
-
'மணிபால்' மீது புகார் ஐ.பி.ஓ.,வை பாதிக்குமா?
-
ஐ.பி.ஓ., அலசல்: மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் லிமிடெட்
-
முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணிகள் ரத்து!
-
நாளைய மின்தடை 29 ம் தேதி
-
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா