ஆன்லைன் மூலம் மோசடி: பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ்
விழுப்புரம்: மேல்மலையனுார் அருகே ஆன்லைன் மூலம் பகுதிநேர பணி எனக் கூறி பெண்ணிடம் 5 லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த முருகந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயது பெண். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மொபைல் போனில் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதிநேர பணி இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், தான் அனுப்பும் புகைப்படத்திற்கு ரேட்டிங் தந்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் அந்த நபர் கூறியதை செய்து 300 ரூபாய் பெற்றுள்ளார். பின், அந்த நபர், அந்த பெண்ணுக்கு ஒரு லிங்க்கை அனுப்பி, அதன் பின் வரும் வெப்சைட்டிற்குள் சென்று பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் செய்ததும், அவரை டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளார்.
பின், சிறிய தொகையை அந்த பெண் முதலீடு செய்து டிரேடிங் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என அந்த நபர் கூறியுள்ளார்.
இதை நம்பி அந்த பெண் 18 தவணைகளாக தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட போன்பே, ஜிபே, யுபிஐ மூலம் அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 5 லட்சத்து 13 ஆயிரத்து 420 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த பணத்தை பெற்ற அந்த நபர், 10,300 ரூபாய் மட்டும் அந்த பெண்ணிற்கு திரும்ப அனுப்பி விட்டு மீதமுள்ள 5 லட்சத்து 3,120 ரூபாயை திரும்ப தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இது குறித்து அந்த பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
பணவீக்க விகிதத்தை விஞ்சி வருவாய் வழங்கும் 4 முதலீடுகள்: உங்கள் போர்ட்போலியோவுக்கு எது பெஸ்ட்?
-
'மணிபால்' மீது புகார் ஐ.பி.ஓ.,வை பாதிக்குமா?
-
ஐ.பி.ஓ., அலசல்: மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் லிமிடெட்
-
முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணிகள் ரத்து!
-
நாளைய மின்தடை 29 ம் தேதி
-
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா