பாரதியார் பல்கலைக்கூட   கலந்தாய்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி:பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பி.எப்.ஏ., ஸ்பைன் ஆர்ட்ஸ் படிப்பினை பொருத்தவரை மாணவி செல்வி முதலிடம் பிடித்துள்ளார். இப்படிப்பில் மொத்தம் 17 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.பி.ஏ., இசை படிப்பினை பொருத்தவரை ஹரிகரன் முதலிடம் பிடித்துள்ளார். இப்படிப்பில் 7 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.பி.ஏ., நடனம் படிப்பினை பொருத்தவரை மாணவி பிரதீபா முதலிடம் பிடித்துள்ளார். இப்படிப்பில் 3 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் இன்று 28 ம்தேதி காலை 11 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement