போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

குறிஞ்சிப்பாடி ஜூலை 28–: போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

குறிஞ்சிப்பாடி போலீசார் நேற்று மதியம் மீனாட்சிப்பேட்டை கிராஸ் ரோடு அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் சிறிய கத்தியை கையில் வைத்து கொண்டு, சாலையில் ஆபாசமாக பேசி, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து வந்தார்.

இதையடுத்து குறிஞ்சிப்பாடி போலீசார் அவரை பிடித்து எச்சரித்த போது, போலீசாரை அந்த நபர் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

போலீசார் அவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்ததில், பேய்க்காநத்தம் பகுதியை சேர்ந்த மனோமூர்த்தி, 30; என, தெரிய வந்தது ‌. மேலும் அவர் மீது, குள்ளஞ்சாவடி, வடலுார் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர்.

Advertisement