மனுவோடு வாங்க... பணத்தோடு வராதீங்க... லஞ்சத்தை ஒழிக்க தாசில்தார் நடவடிக்கை
மானாமதுரை: மானாமதுரை தாலுகா அலுவலக அறிவிப்பு பலகையில் 'கோரிக்கை மனுவுடன் வாங்க. பணம் வைத்திருந்தால் வரவேண்டாம் என லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், நில அளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் மக்களிடம் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒருசிலர் லஞ்சம் வாங்குவதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதனைத் தடுக்கும் விதமாக புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாசில்தாராக பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார், தனது அலுவலகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், புரோக்கர்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், அதிக பணத்துடன் வருபவர்களை தடுக்கவும் நடவடிக்கை எடுத்தார். அறிவிப்பு பலகைகளிலும் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர்களிலும்
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வர வேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் இருவர் 'எதற்காக வருகிறீர்கள் . பணம் ஏதும் வைத்துள்ளீர்களா 'என விசாரணை செய்து மக்களை உள்ளே அனுப்பி வருகின்றனர். இதனை பலரும் வரவேற்றுள்ளனர்.
அவர் புகைப்படத்தை போட்டு ருந்தால் அவர் பற்றி தெரிந்து இருக்கும்...
வருவாய்த் துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெற ஒருவித தயக்கம் உள்ளதை அறிய முடிகிறது. எனினும் லஞ்சத்தை இதுவரை கேட்டு பெற்ற அரசு ஊழியர்கள், அதனை விடவும் மனமின்றி, பெறவும் மனமின்றி பெரிதும் தவிக்கின்றனர்.
இதுதான் " மாற்றம் "....
இதுதான் " மாற்றம் "....
இதுதான் " மாற்றம் "....
இதுதான் " மாற்றம் "....
இப்பப் புரிகிறதா? ஏன் திருட்டு திமுக, ஊழல் அதிமுக, கோபாலபுரம் கொத்தடிமை நாதக இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று முயற்சி செய்கிறது என்று.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம் ஆனால் நேரில் பார்த்ததே கிடையாது ஆனால் நமது விஜய் அரசு மக்களுக்கு இவைகளை நேரில் காண ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறர் மிக்க நன்றி மக்கள் திருந்துவார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்
All credit will go to vijay
மானாமதுரை தாசில்தார் அலுவலகத்தில் மாதாமாதம் எத்தனை கோரிக்கை மனுக்கள் வந்தன. அதில் எத்தனை மனுக்கள் பைசல் செய்யப்பட்டன என்பதையும் தாசில்தார் அறிவிப்பு பலகையில் எழுதி ஓட்டினால் சிறப்பாகயிருக்கும்.
மக்கள் மனுக்களோடு எந்த ஒரு அலுவலகத்திற்கும் செல்லக்கூடாது .மனுக்களையெல்லாம் கணினி மூலமோ அல்லது கணினியில் இருந்து பதவிரக்கமிட்ட மனுமூலமோ தபாலில் அனுப்பி தீர்வுகாணும் முறையை
நடம்மு றைபடுத்தவேண்டும். மநுப்பற்றிய விசாரிக்கவேண்டுமானால் அதிகாரிகள் மக்களிடம் சென்று விசாரித்து முடிவெடுக்கவேண்டும் . இதை அரசு எல்லா மாவட்டங்களிலும் ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி மனுக்களை பெற்று ,துறைவாரியாக பிரித்து அனுப்பி தீர்வுகாணுமுறையை நடைமுறை படுத்தவேண்டும் .அப்போதுதான் லஞ்சம் ஒழியும் .மக்களை அலைக்கழித்தால் லஞ்சம் கொடுத்து உடனடி தீர்வுகாண எண்ணுவார்கள் .லஞ்சத்தை அறவே ஒழிப்பது கடினம் .district wise centralized service center will help to eradicate curruption .
தாலுகா ஆபீஸ் இல் 3ம் இறுதி கட்டம் தான் லஞ்சம். முதல் 2 கட்டங்கள் வி ஏ ஓ மற்றும் ஆர் ஐ அலுவலகங்கள். எனவே இந்த அலுவலகங்களிலும் நோட்டீஸ் வேண்டும்.
Super Sir Thank you.மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை