ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரம் அடையும் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பேரணி
முசாபராபாத்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 52 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அவாமி அதிரடி கூட்டுக்குழுவினர் ராவலகோட் பகுதியில் இருந்து முஸாபராபாத் நகரை நோக்கி பேரணியாக சென்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில், சட்டசபையில் அகதிகளுக்கான இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் இன்று ( ஜூலை 27) தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் வன்முறை, முறைகேடு உள்ளிட்டவை நடந்தன.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஜே.ஏ.சி.சி., எனப்படும் அவாமி அதிரடி கூட்டுக்குழு, சில நிபந்தனைகளை விதித்து இருந்தது.
கடந்த 52 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த இக்குழுவினர், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல், தங்களின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என தெரிவித்து இருந்த இக்குழுவினர் இதற்காக இன்று மதியம் வரை, நிபந்தனை விதித்து இருந்தனர். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதன் பிறகு, அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல கோட் பகுதியில் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் முஸாபராபாத் நகரை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரப்பான் பூச்சிகள் தலைவனை இவர்கள் தேடுகிறார்கள். அவன் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிய பிரதமராக தேர்வு செய்ய விருப்பமாம்.மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை