கூரை வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

உளுந்துார்பேட்டை சோமாசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் பிரகாஷ், 30; நேற்று மதியம் 12;30 மணியளவில் தனது மனைவி பிரியா, தாய் தாமரைச்செல்வி தந்தை காசிநாதன் ஆகியோருடன் மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழாவுகாக கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென அவரது கூரை விட்டு தீ பிடித்து எரிந்தது.

திருநாவலுார் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement