மளிகை கடைகளில் திருடிய சிறுவன் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மளிகை கடைகளில் பணம், பொருட்களை திருடிய வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தில் கடந்த 24ம் தேதி நள்ளிரவு விக்னேஷ், 31; மளிகை கடையில் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போனது. அதே போல், அருகேவுள்ள சங்கர், 47; என்பவரின் மளிகைக் கடையில் 600 ரூபாய், சிகரெட் பாக்கெட்டுகளும், முருகன், 48; என்பவரின் முருக்கு கடையில் 2,000 ரூபாயும் ஒரே நாள் இரவில் திருடு போனது.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், இந்த மூன்று கடைகளிலும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement