மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை: பார்லி.,யில் மத்திய அமைச்சர் பதில்
புதுடில்லி: 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, தமிழகம் உட்பட பிற மாநிலங்களின் ஒப்புதல் கர்நாடகாவுக்கு தேவையில்லை' என, பார்லி.,யில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், பா.ம.க., தலைவரும், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான அன்புமணி, 'மேகதாது அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி நேற்று கூறியதாவது:
காவிரி நீர் தொடர்பான வழக்கில், 2018 பிப்., 16ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான அணையையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
மேகதாது அணை தொடர்பாக, 2019ல், மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு ஒரு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு, அந்த அறிக்கை கர்நாடகாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
5.972 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது: 2 பேர் தலைமறைவு
-
தி.மு.க., 'ஆல்பா' கொரோனா த.வெ.க., 'பீட்டா' கொரோனா
-
டாஸ்மாக் பணியாளர் 3 பேர் சஸ்பெண்ட்
-
கிராமங்களில் தங்கி மக்கள் குறைகளை கேட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்
-
பெயின்டர் மீது போக்சோ
-
மக்கள் குறைதீர் கூட்டத்தில் த.வெ.க., துண்டு விசிலுடன் நுழைந்த பாட்டியால் பரபரப்பு