கருவின் பாலினத்தை வெளியிட்ட 'யூ டியூபர்' இர்பானுக்கு சிக்கல்
சென்னை: கருவில் இருந்த சிசுவின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், 'யூ டியூபர்' இர்பானிடம், மக்கள் நல்வாழ்வுத் துறை மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது.
நம் நாட்டில், கருவின் பாலினத்தை அறியவும், அவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தடை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் கர்ப்பிணி மனைவியை துபாய்க்கு அழைத்து சென்ற இர்பான், மருத்துவ பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து கொண்டார்.
அதை, தன், 'யூ டியூப்' சேனலில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சார்பில், இர்பானிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கடிதம் வழங்கினார். இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என உத்தரவாதம் அளித்தார். அதையேற்று, அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இர்பான் மீது நடவடிக்கை தேவையில்லை என தெரிவித்திருந்தார்.
இதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'இர்பான் மீது என்ன நடவடிக்கையை சுகாதாரத் துறை எடுத்தது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், எட்டு வாரங்களுக்குள், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டனர்.
அதை ஏற்று, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கக அதிகாரிகள், இர்பான், வழக்கறிஞர் ஜெகன்நாத் ஆகியோரிடம், விசாரணை நடத்தினர்.
இது குறித்து, மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், இர்பானின் விளக்கம் பெறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பரிசோதனை செய்திருந்தாலும், இந்தியாவில் கருவின் பாலினத்தை வெளியிட, தடை சட்டம் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீதான நடவடிக்கை குறித்து, ஆக., 15ம் தேதி, நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தூக்கி உள்ள வச்சு விடுங்க
இப்போ தானே ரெண்டு வருஷம் ஆகியிருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம். பிள்ளை வளர்ந்து படித்து பெரிய ஆளாகட்டும் அதுவரைக்கும் விசாரணையை நீட்டித்தால் தானே நல்லது.
. எது அத்துமீறல் ???
கருவின் பாலினத்தை அறிவதை சட்டம் தடை செய்ததற்கு என்ன காரணம் என நாம் முதலில் அறிந்து தெரிந்து பேச வேண்டும். பெண்சிசு கொலை என்கிற கொடூர சம்பவங்களை அரங்கேற்றிய நீங்களெல்லாம் இப்போது தனது ஆசை மகளை ஆர்வத்தோடு வரவேற்ற ஒரு தகப்பனின் பேரார்வத்தை தண்டனைக்குரிய குற்றம் என்கிறீர்கள் இதுக்கு பேருதான் காலக்கொடுமை.
உங்க ஆளுனா எது செஞ்சாலும் முட்டு கொடுபீங்களே
August 15, 2026 (Independence Day) is a court holiday in India, but it falls on a Saturday, which is already a regular weekly closed day for most courts like the Supreme Court of India and High Courts.
தற்போது 1000 ஆணுக்கு 1020 பெண் இருக்கிறதாம் ஆகவே பழைய சட்டத்தை கைவிட்டு விடலாம். மூன்று ஆண் பிள்ளைகளோடு பெண் பிள்ளைக்காக ஏங்கும் தம்பதியரின் உரிமையை பறிக்க கூடாது. கருக்கலைப்பு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுகிறது.
ஓட்டு வாங்கி அரசியலுக்காக இது போன்ற சட்ட மீறல்களையெல்லாம் கண்டும் காணாமல் போனால் சட்டத்தின் ஆட்சியின் தேவை என்ன ? இவனை தூக்கி ஒரு பதினைந்து நாள் உள்ளே வைங்க ....இல்லைன்னா இவனின் வரம்பு மீறல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ...
வேற வேலை இருந்தால் பாருங்கப்பா.
சரி சரி விடுங்க, விடுங்க. அவரோட குழந்தை அவரே மன்னிப்பும் கேட்டுட்டார். என்ன பழனி முருகன் சொத்தையா ஆட்டய போட முயன்றார்? இல்லை யார் அந்த சார் மாதிரியான தவறு ஏதும் செய்தாரா? அத்தனை அயோக்கியத் தனத்தையும் பண்ணி விட்டு நல்லவர்கள் போல் நிறையப் பேர் உலா வரும் இந் நாட்டில் இதைப் போய் பெருசு பண்ணிக்கிட்டு?
வாடகைத்தாய்- சட்டமுறைய மதிக்காத நயன்தார-வுக்கு சிக்கல் இல்லையா?..
அதெப்படி, அவங்க எங்க சினிமாஜாதி, அதுவும் எங்க தளபதி கூட நடிச்சவுங்க.
மருத்துவமனையில் பச்சை கலரில் போஸ்டர் உள்ளது. தண்டனை தெரிவிக்க பட்டுள்ளது.மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை